நீ நினை அதற்கான பலம் தானாகவே வரும் | நிரந்தர மகிழ்ச்சிக்கு முயற்சி என்பது கடவுளின் மிகப்பெரியகொடை | ||
நீ கேட்காதவரை உனக்கு உதவி கிடைக்காது.... நீ தட்டினால் தான் (கதவு திறக்கப்படும் ) இது இயேசுபிரான் சொன்னமொழி நீ நகர்த்தாமல் எதுவும் நகராது நகர்ந்து கொண்டிருப்பவை கூட நீ தடுக்காவிடின் எதுவும் நிற்காது இது பௌதிகம் சொல்லும் மொழி நீ முயலாமல் கனவுகள் மலரா முயற்சியை சுவாசி... உன் மூச்சுக்காற்று தென்றலாம் கனவு மொட்டுக்கள் சட்டென்றே பூவாகும் எது நிகழவேண்டுமோ... அது நிகழும் நீ நினைத்தால் மட்டும் | நிரந்தரமான மகிழ்ச்சி தேடி... நித்தம் அலையும் நீ ஏன் முயற்சியை கைவிடுகிறாய் திரும்பத் திரும்ப முயற்சிசெய்... அப்போது நீ முயற்சியாளன் என்ற மகிழ்ச்சி கொள் முயற்சி என்பது கடவுளின் மிகப்பெரிய கொடை தோல்விகளை..காண்கிறபோது துவளாதே சோராதே தொடர்ந்து தோற்றுப்போனாலும் கவலை கொள்ளாதே கச்சிதமே அது உரமாகட்டும் - அப்போ நிரந்தர மகிழ்ச்சியை அனுபவிக்க நீ பக்குவம் பெறுவாய் | ||
முயற்சிசெய் வியூகம் தானே வரும் | தேடிச்செல் | ||
வியூகம் என்பது நீண்டநாட்கட்கு பழுதடையாதிருக்கும் உணவுப்பண்டமல்ல அது விரைவில் எதிரிக்கு விளங்கிவிடும் பாவித்த வியூகத்தை மீண்டும் பாவிக்காதே ஒரே வியூகத்தை எப்போதும் கையாளாதே ஒருமுறை பாவித்த வியூகத்தை மறுமுறை பாவிக்காதே எதிரி உனக்கு ஏகப்பட்ட வியூகம் சொல்லித்தருவான் எதிரி உனக்கு ஆயுதம் தருவான் மாவோ சொன்னபடி எதிரி நீ பாவிக்க வேண்டிய ஆயுதத்தை தெரிவு செய்வான் எதிரியை எண்ணிக் கலங்காதே எதிரி ஒரு துரும்பு (அல்ல) எச்சரிக்கையாய் இரு..... | கனவுகள் எல்லாம் காணும் கணப்பொழுதிற்கு – பிரமிப்பு கண்விழித்துப் பார்ப்பின் கண்களுக்கே முடியுமா நம்மால் - வியப்பு கனவுகளோடு வாழ்.... காலம் வென்ற அறிஞர் அப்துல்கலாம் - குறிப்பு கனவோடு நில்லாதே... காலம் உன்னைத் தேடிவருவது அழகல்ல – நீ காலத்தை தேடி ஓடு.... கைகளில் ஏதுமில்லை என்று எண்ணாதே காரியத்தை தொடங்கு.... நம்பிக்கை பிறக்கும் அது போதும்.... கனவுகள் எல்லாம் நிஜயமாகும். | ||
Sunday, December 26, 2010
Subscribe to:
Posts (Atom)



