Sunday, January 2, 2011

நம்பிக்கை மடல்

       உனது தந்தையின் மரணச் செய்தியை பத்திரிகையூடாக அறிந்தேன். நேரில்
வரமுடியவில்லை. எனினும் இக்கடிதத்தை உனக்கு அனுப்புகின்றேன். நேரில் வந்து அருகில்
இருந்து கூறுவது போன்ற அமையட்டும்.

       கவலைப்படாதே உனக்கு வயது குறைவுதான் உன் தந்தையை உழைத்து பார்க்கவில்லை என்று
கவலைப்படுவாய். பறவாயில்லை உன்ககாக இவ்வளவு காலமும் கஷ்டங்கள் எல்லாம்
அனுபவித்து உன்னை ஆளாக்கிய தந்தை இறந்துவிட்டார் என்பது உண்மைதான் ஆனால் அவரது
ஆத்மா இன்னும் உன்னையும் உன் வெற்றிகளையும் தான் எதிர்பார்க்கும்.
       கவலைப்படடு மனம் உடையவதை நிறுத்திக்கொன் நீ கவலைப்படுவாயாயின் இழந்தலை
என்னும் பட்டியலில் உன் தந்தையை மட்டுமல்ல அவரது ஆத்மாவின் இறுதி நேர
ஆசைகளையும் தான்.
       குற்றவாளியின் கடைசி ஆசையை கூட உலகம் நிறைவேற்ற நினைக்கிறது. எனவே நீ
கவலைகள் எல்லாவற்றையும் ஒரு மூட்டையில் கட்டி போட்டுவிட்டு உன் தந்தையின் ஆத்ம
தாகத்தை தீர்க்க அவரது அந்த இறுதி நேர ஆசையை நிறைவேற்ற அந்த ஆன்மா உன்னுடன்
தான் இருக்கும். உனக்கான இடர்கள் யாவற்றையும் தீர்க்கும். கவலைகளை மற.
       உருவத்தைத்தான் இழந்துவிட்டாய். ஆனால் அந்த ஆத்மாவின் ஆசிகள் உனக்குத்தான்
கவலைப்படாதே.

இங்ஙனம்

Sunday, December 26, 2010


 நீ நினை அதற்கான பலம் தானாகவே வரும்

நிரந்தர மகிழ்ச்சிக்கு முயற்சி என்பது கடவுளின்
                                 மிகப்பெரியகொடை
 

 

நீ கேட்காதவரை
உனக்கு உதவி கிடைக்காது.... நீ
தட்டினால் தான் (கதவு திறக்கப்படும் )  இது
இயேசுபிரான் சொன்னமொழி
நீ நகர்த்தாமல் எதுவும் நகராது
நகர்ந்து கொண்டிருப்பவை கூட
நீ தடுக்காவிடின் எதுவும் நிற்காது
இது பௌதிகம் சொல்லும் மொழி
நீ முயலாமல் கனவுகள் மலரா
முயற்சியை சுவாசி... உன்
மூச்சுக்காற்று தென்றலாம்
கனவு மொட்டுக்கள் சட்டென்றே
பூவாகும்
எது நிகழவேண்டுமோ... அது
நிகழும் நீ நினைத்தால் மட்டும்

 

நிரந்தரமான மகிழ்ச்சி தேடி...
நித்தம் அலையும் நீ ஏன்
முயற்சியை கைவிடுகிறாய்
திரும்பத் திரும்ப முயற்சிசெய்... அப்போது நீ
முயற்சியாளன் என்ற

 மகிழ்ச்சி கொள்
முயற்சி என்பது கடவுளின்
மிகப்பெரிய கொடை
தோல்விகளை..காண்கிறபோது
துவளாதே சோராதே
தொடர்ந்து தோற்றுப்போனாலும்
கவலை கொள்ளாதே
கச்சிதமே அது உரமாகட்டும் - அப்போ நிரந்தர மகிழ்ச்சியை அனுபவிக்க
நீ பக்குவம் பெறுவாய்
 

  முயற்சிசெய் வியூகம் தானே வரும்


தேடிச்செல்
வியூகம் என்பது நீண்டநாட்கட்கு
பழுதடையாதிருக்கும் உணவுப்பண்டமல்ல
அது விரைவில் எதிரிக்கு விளங்கிவிடும்
பாவித்த வியூகத்தை மீண்டும் பாவிக்காதே
ஒரே வியூகத்தை எப்போதும் கையாளாதே
ஒருமுறை பாவித்த வியூகத்தை மறுமுறை
பாவிக்காதே
எதிரி உனக்கு ஏகப்பட்ட
வியூகம் சொல்லித்தருவான்
எதிரி உனக்கு ஆயுதம் தருவான்
மாவோ சொன்னபடி
எதிரி நீ பாவிக்க வேண்டிய
ஆயுதத்தை தெரிவு செய்வான்
எதிரியை எண்ணிக் கலங்காதே
எதிரி ஒரு துரும்பு (அல்ல)
எச்சரிக்கையாய் இரு.....
 
கனவுகள் எல்லாம் காணும்
கணப்பொழுதிற்கு – பிரமிப்பு
கண்விழித்துப் பார்ப்பின்
கண்களுக்கே முடியுமா நம்மால் - வியப்பு
கனவுகளோடு வாழ்....
காலம் வென்ற அறிஞர் அப்துல்கலாம் - குறிப்பு
கனவோடு நில்லாதே...
காலம் உன்னைத் தேடிவருவது அழகல்ல –
நீ
காலத்தை தேடி ஓடு....
கைகளில் ஏதுமில்லை என்று எண்ணாதே
காரியத்தை தொடங்கு.... நம்பிக்கை
பிறக்கும்
அது போதும்....
கனவுகள் எல்லாம் நிஜயமாகும்.